மஹிந்த ராஜபக்சவின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அணி திரண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் மஹிந்த தரப்புக்கெதிரான தமது நிலைப்பாட்டைக் கையாள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் துமிந்த திசாநாயக்க தலைமையிலான அணி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதுடன் பெரும்பாலும் வாக்கெடுப்புகளின் போது நடுநிலைமை வகிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத போதிலும், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் தனக்கு விருப்பமில்லையென மைத்ரி தெரிவிக்கின்ற நிலையில் மஹிந்தவின் ஆதரவுக் களம் ஆட்டங் காண்கின்றமை குறிப்பிடத்தக்கது.