பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் - மைத்திரி

NEWS


பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும், 225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால்,

அவரே ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top