உள்நாட்டில் தலையிட்டால் தூதுவர்கள் வெளியேறும் நிலை...

NEWS
இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பீடாதிபதி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் முழுமையாக உள்நாட்டு அரசியல் சார்ந்தது. இதனால், வெளிநாட்டுத் தூதுவர்கள் தலையிடவோ, வெளிநாட்டுச் சட்டங்களுக்கு இந்நாட்டை உட்படுத்தவோ தேவையில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
6/grid1/Political
To Top