UNF தலைவர்கள் இன்று சந்திப்பு - முக்கிய பேச்சு வார்த்தை

NEWS
ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில், ரணிலுக்கும் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கவில்லையென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. அதன் பிரகாரம் அவரும் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை மறுதினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், அவை குறித்த முக்கிய விடயங்கள் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6/grid1/Political
To Top