உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகள் பற்றிய சரியான தெளிவுகள் இல்லாமல் பொதுவெளியில் கருத்துக்கள் தெரிவிப்பதிலிருந்து விலகியிருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கும்போது அதுபற்றிய முழுமையான அறிவுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளுமாறு ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயப்பரப்பு தொடர்பில் போதிய அறிவு இல்லையெனில் கருத்துச் சொல்வதிலிருந்து விலகியிருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஊடகங்களிடமும் பொது மேடைகளிலும் கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே ரணில் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.