இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செயற்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள சந்திரிக்கா திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கூட்டணியுடன் சந்திக்காவும் இணையவுள்ளார். கூட்டணி தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.தலைமை சபையின் கீழ் இயங்கும் இந்த புதிய அரசியல் முன்னணி, எதிர்வரும் நாட்களில் ஆரம்பித்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளாக பொதுத் தேர்தலில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மைத்திரி - மஹிந்த கூட்டணியை வெற்றி கொள்ளும் நோக்கில் பலமான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சந்திரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளார்.