சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்க UNP தீர்மானம்!

NEWS


இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வானது பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. 

இந் நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை அடிப்படையாக கொண்டு குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top