அமெரிக்காவின் மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் நிறுவனம் இலங்கைக்கு வழங்குவதாக இருந்த 500 மில்லியன் டொலர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பணம் இலங்கை மீண்டும் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்ற அடிப்படையின் கீழ் வழங்கப்படவிருந்தது.இலங்கை வரலாற்றில் திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்ற அடிப்படையில் வழங்கப்படவிருந்த மிகப் பெரிய தொகை இது என ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் அரசியல் நெருக்கடியே இதற்கு காரணம் எனவும் ஹர்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.