இலங்கையில் உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான அறிவிப்பு! CeylonMuslim Journalist

NEWS
Srilanka Muslim Journalist | ceylonMuslim | Srilanka 
இலங்கையின் முஸ்லிம்களுக்கான ஊடகங்கள் வளரவேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் கடந்த 08 வருடங்களாக முஸ்லிம்களின் முத்திரையாக செயற்பட்டுவரும் எமது “சிலோன் முஸ்லிம் ” ஊடக நிறுவனத்தினை புதிய கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கு எமது புதிய நிருவாக சபைதீர்மானித்துள்ளது. 

அந்த வகையில் முழு இலங்கையிலும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு சிலோன் முஸ்லிம் இணையத்தளம் அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக பல ஊடக நிறுவனங்களில் சேவையாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றோம். இலங்கையில்  முஸ்லிம்களுக்கு ஆதரவான, எதிரான சம்பவங்கள் நடைபெற்றால் அதை முழு உலகிற்கும் தெரியப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகம் எழிச்சியை நோக்கி நகரும் . அந்த வகையில் எமது இணையத்தளத்திற்கான் தனித்துவ கடமையை செயற்படுத்த எண்ணியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அந்தவகையில், எமது ஊடக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஊடகவியலாளர்களும், புதிதாக ஊடக பணியை மேற்கொள்ள விரும்பும் நல்லுல்லங்கள் எம்முடன் இணையுமாறு கோருகின்றோம். 


எமது ஊடகவியலளாரிய நீங்கள் எம் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் அநீதிகள்,  எம் சமூகத்தின் செயற்பாடுகளை வெள்ளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில் குறித்த ஊடகவியலாளர் செயற்பட வேண்டும் என்பதே எமது இலக்கு! மாறாக எமது இணையத்தளத்தம் எவ் மதத்திற்கும் எதிரானதல்ல! மக்களின் குரலாக அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் திட்டமாக எமது இணையத்தளம் செயற்படும் இன்ஷா அல்லாஹ்!

நீங்கள் ஒரு ஊடகவியலாளர் எனின் : 

உங்கள் பெயர்: 
விலாசம் : 
மாவட்டம்: 
தொலைபேசி இலக்கம் 
ஈமெயில்: 
தேசிய அடையாள அட்டை இல: 
உங்கள் தற்போதைய தொழில்: 
கல்வி நிலை: 
எந்த ஊடக நிறுவனங்களில் சேவையாற்றுகின்றீர்கள் தொடர்பில்: 


என்பனவற்றுடன் உங்களது புகைப்படம் ஒன்றினையும் சேர்த்து ceylonmuslim24@gmail.com  என்ற ஈமெயிலுக்கு விபரங்களை இன்றே அனுப்பி வையுங்கள்.எமது செய்திப்பிரிவு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும். 
6/grid1/Political
To Top