ரணில் பிரதமரானதுடன், கொழும்பில் கொண்டாட்டம்

NEWS
அஷ்ரப் ஏ சமத்

பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க இன்று 11.03 க்கு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்ணிலையில் பிரதமராக பதவியேற்றதன் பின் 53 நாற்கள் அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது. அத்துடன் ஆதரவாலா்கள் காலை ஜனாதி பதி செயலகத்திலும் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலறி மாளிகையிலும் ஆரவாரமாக கோசமிட்டு பாற்சோறு உண்டனா்

 அத்துடன் பிரதமர் சகல மத வழிபாடுகளிலும் கலந்து கொண்டாா் இந்நிகழ்வில் சகல பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஜ.தே.கட்சியின் அமைப்பாளா்கள் மற்றும் ஜ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவா்கள் பா. உறுப்பிணா்களும் காணப்பட்டனா். அத்துடன் அலறிமாளிகையின் கூட்ட மண்டபம் மற்றும் பிரதேசங்கள் ஆதரவாலா்கள் ஊடகவியலாா்கள் நிரம்பிக் காணப்பட்டனா் 




6/grid1/Political
To Top