Top News

மைத்திரியின் அதிரடி நடவடிக்கை இன்று!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

முதற்கட்டமாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கு அல்லது அதனை ரத்துச் செய்வதற்காக புதிய வர்த்தமானி ஒன்று இன்று வெளியிடப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த வர்த்தமானியை வெளிடுவதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த மனு மீதான விசாரணை நாளைய தினம் உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் வர்த்தமானியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, பெரும்பான்மையை நிரூபித்து புதிய பிரதமரை நியமித்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post