Top News

ஈலங்கட்ட உம்பலாட்டதமாய் தம்பியோ" ; இன்றும் காதில் ஒலிக்கிறது !

அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற தமது ஒரே ஒரு மகனின் பாலர் பாடசாலை இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக முழு குடும்பமுமே மிகவும் சந்தோசமாக வெளியாகி வீதிக்கிறங்கியது. ஆனாலும் ஒரு வாடகை வாகனத்தைக்கூட பெறமுடியாமல் போய்விட்டது. காரணம் அன்று மருதானை சினிசிற்றிக்குமுன்னால் அதே தினத்தில் இடம்பெற்ற பேரணியிலும் கூட்டத்திலும் முன்னாள் மற்றும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமரும் கலந்துகொள்ளும் மாபெரும் பேரணியொன்றும் இடம்பெற்றதால் பாதைகள் மூடப்பட்டிருந்தமையே. மக்கள் சுமார் நண்பகல் பணிரெண்டுமணிமுதல் இந்த அசௌகரியங்களையெல்லாம் தாங்கவேண்டியாயிற்று...

இவ்வாறான நிலையில் நிகழ்விற்கு முழுகுடும்பமும் நடந்தே செல்லவேண்டியேற்பட்டது. பாதைமுழுவதும் வெளிப்பிரதேசங்களிலிருந்து கொண்டுவந்து குமிக்கப்பட்ட இந்த நாட்டின் புதியபிரதமரின் ஆதரவாளர்கள்... இவர்களை ஊடறுத்தே அடுத்தவீதியிலுள்ள டவர் மண்டபத்தை அடையவேண்டும். வேறு மாற்றுப்பாதைகளே இல்லை.

மெதுமெதுவாக நகர்ந்த அந்த குடும்பம் மருதானை பொலிஸ் நிலையத்தினை கடந்து சென்றபோது அருகில் வந்த ஒரு பெரும்பாண்மை சகோதரன் வழிமறித்து சிங்களத்தில் குடும்பத்தலைவரை நோக்கி "என்ன பன்றி இறைச்சி உண்ணுவோமா ?" என ஒருவித நக்கல் நையாண்டியுடன் வம்புக்குவலிந்திழுக்கும் பேச்சைத் தொடர்ந்துள்ளார். இந்தக்கேள்வியினை சற்றும் எதிர்பாராத அவரால் இலகுவாக நம்போல் கடந்துசெல்ல முடியவில்லை. தான் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பதனை புரியாதிருக்க அவரால் முடியவில்லை. இவ்வளவிற்கும் நகர பாடசாலையில் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் . சேர் சிங்கள மொழி ஆசிரியர் . ஒவ்வொரு நோன்பு விடுமுறையிலும் நாற்பது நாட்கள் தாவா பணிக்காக பலவருடங்களாக தன்னை அர்ப்பணித்து வருபவர். மார்க்கத்தில் பற்றாளன்...

சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுழையாத ஆசானுக்கு பொறுமை இழந்துவிட்டது. அருகில் காவலுக்கு நின்றிருந்த பொலிசாரை அழைத்த ஆசிரியர் பொதுமையில் பேசினார். இவர்கள் போன்றவர்களால்தான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை மதப்பிரச்சினைகள் எல்லாமே வருகின்றன. என சிங்களத்தில் உருட்டிவிட்டிருக்கின்றார். ஒருபுறம் ஆழ்ந்த கவலை.... அந்த இடத்திலிருந்தே துஆசெய்திருக்கிறார் கண்ணீர்விட்டிருக்கிறார்...

பாதையால் ஒருத்தருக்கு செல்லும் உரிமைகூட இல்லையா. அதிகாரத்திற்கு வந்துவிட்டால் ஆரம்பித்துவிடுகிறதா ...

கடந்தமுறை இவர்களின் அட்டகாசத்திற்கு அஞ்சிய பலர் இன்னும் அதை மறக்கவில்லை. பெரும்பாலானவர்கள் உம்றாசென்று இதுபோன்று பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். ஏனெனில் ஆட்சியும் அதிகாரமும் அல்லாஹ்வையன்றி யாராலும் வழங்கப்படுவதேயில்லை ! எனவே அவனிடமே அதை முழுமையாக பாரம்சாட்டுதல் தகும்....

சரி இதை இங்கு ஏன் பதிவிடுகிறோம் என்றால் சற்று திரும்பிப்பாருங்கள்... கடந்த அக்டோபர் 26 முதல் மட்டும்...

26 ஆம் திகதியே டான் பிரியசாத்திற்கு பிணை

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கட்டைக் கழிசனுடன் வருகை

விசேட குற்றப்பிரிவிற்கான அதிகாரி இடம்மாற்றம்

62 லட்சம் மக்கள் வாக்களித்தமை வெறும் மஹிந்த எதிர்ப்பினால் மாத்திரமன்றி சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவவும்தான். ஆனால் அவ்வாறான ஆணைக்குழுக்களால் சிபாரிசுசெய்து தாபிக்கப்பட்ட மேலதிக நீதிமன்றங்கள் விசாரணைக் கமிஷன்கள் விசாரணைகளை முடித்து தீர்ப்பை வழங்குமுன் அவை உடனடியாக கலைக்கப்படவேண்டும் என புதிய அரசாங்கம் முனைப்புக்காட்டுகிறது.

ஞானசாரர் விடுவிக்கப்படவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலீசார் தண்ணீர்த்தாரைப் பிரயோகமும் அமைச்சர்கள் முதல் ஜனாதிபதிவரை முன்கதவால் அழைத்து பேச்சுவார்த்தை செய்தமை

சிறைக்கு இரகசியமாகச்சென்று ஜனாதிபதியும் புதிய பிரதமரும் சாரவை சந்திக்கின்றனர்.

உலக சந்தையில் 40% விலை குறைவடைந்தும் பெற்றோலிய பொருட்களுக்கு வெறும் ஐந்தோ பத்தோ ரூபாவில் விலையை குறைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்கள்....

நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிரேரணைகளை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியே நிராகரிக்கிறார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமுடியாது உச்சநீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வேன் என்கிறார் புதிய பிரதமர் ராஜபக்சே!

ஷிரந்தி ராஜபக்ஷ வேறு அரச அதிகாரிகளுக்கு விரலசைக்கத் தொடங்குகிறார்.

இவ்வளவென்ன இதைவிட இன்னும் பல மோசமான விடயங்கள் நடந்தேறிவிட்டன நடக்கவும் காத்திருக்கின்றன.....

யுத்தம் முடிந்துவிட்டது "ஜாதிய அமத்தெனவா ஜனாதிபதித்துமா" என்ற நாட்டுமக்களுக்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறப்போகிறது என்று செய்திகள் வாசித்துவிட்டு இடையில்வந்த வர்த்தக விளம்பர இடைவேளையில் திரும்பி முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து காரியாலய சாரதி " தெக்காநேதெ... ஈலங்கட்ட உம்பலாட்டதமாய் தம்பியோ" பார்த்தயல்தானே அடுத்தது உங்களுக்குத்தாண்டா சோனிகளே .... என்று கூறியது இன்றும் காதில் ஒலிக்கிறது...

ஆக ஆட்சியையும் அதிகாரத்தையும் இறைவன் விரும்பும் யாருக்கும் கொடுப்பான்... ஆனால் அது நம்மைப்பொறுத்ததாவும் நம்மை சோதிப்பதற்காகவும்கூட இருக்கலாம்.... அறிவூட்டுவதற்காகவும் கொடுக்கப்படலாம்.

வெறும் 40 நாட்களுக்குள் போட்ட கூத்துகள் அடங்கலாம்... இல்லை உக்கிரமடையலாம்.

எனினும் அந்த ஆசிரியர் இன்றும் என்றும் "என்ன பன்றிமாமிசம் திண்போமா?" என்ற இந்த வாசகத்திற்கு எதிராக இறைவனிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறார் ! அந்த மேன்முறையீடு நிச்சயமாக அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமானதல்ல என்பதனை நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும்... நாம் எங்கிருந்தாலும் !

என்ன பன்றி மாமிசம் சாப்பிடுவோமா?

-அஸ்லம் ரவூப் -
Previous Post Next Post