மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Ceylon Muslim
தெஹிவளை முகையிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் பரிபாலணசபையின்  வேண்டுகோளின் பேரில் தெஹிவளைப் பிரதேசத்தில் வாழும் மூவினங்களையும் சோ்ந்த 1000 பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளுக்கு பாடசாலைக்கான உபகரணப் பொதிகளை சம் சம் பவுண்டேசன் தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி ஹனிபா அவா்களினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு நேற்று தெஹிவளை மேயா் ஹவுஸில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் தெஹிவளை கல்கிசை மேயா் ஸடான்லி, பிரதி மேயா் தெஹிவளை பிரதேச செயலாளா் திருமதி சுப்ரமணியம். தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவா் இஸ்மாயில் ஹாஜி உட்பட மாநகர சபை உறுப்பிணா்களும் கலந்து கொண்டு 1000   பொதிகள் வழங்கப்பட்டன அப் பொதியில் பாடசாலைப் புத்தக் பை, மற்றும் உபகரணங்கள் அப்பியாச கொப்பிகள் ,காலணிக்கான பவுச்சா் கொண்ட வையாகும் ஒவ்வொரு பொதியும் 3000 ருபா பெருமதி வாய்ந்தவைகளாகும்.



- அஷ்ரப் ஏ சமத்
6/grid1/Political
To Top