ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை மாணவனான மொஹமட் கமார் நிஷாம்டீனை சிக்க வைத்த ஒருவரை நியூ சவுத்லேண்ட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் வீரரான உஸ்மான் கவாஜாவின் சகோதரரான அர்லான் கவாஜ் என்ற நபரையே அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக நிஷாம்டீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சுமார் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், குற்றச்சாட்டை ஒப்புவிக்க முடியாது போனதால், பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து குற்றச்சாட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நிஷாம்டீன் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டார்.