எனக்கு எதிராக ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த அமர்வைப் போன்று இந்த அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
இன்றைய சபை அமர்வில் சரத் பொன்சேகாவிற்கான நேர ஒதுக்கீட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் கூட ஜனாதிபதி என்னை விமர்சித்துள்ளார். அவருக்கு என்னைப் பற்றி விமர்சிக்காது வேறு வேலை செய்ய முடியாது” என சரத்பொன்சேகா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத்பொன்சேகா தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத்பொன்சேகா,“2010ஆம் ஆண்டு தேர்தலில் தான் வெற்றிப் பெற்றிருந்தால் நாட்டை படு மோசமான இந் நிலைக்கு கொண்டு வந்திருக்கவும் மாட்டேன்.
நான் ஜனாதிபதியாக இருந்தால் இப்படி நடக்க மாட்டேன் என்னை வளர்த்த கட்சியை மோசம் செய்திருக்க மாட்டேன்.பயந்து பயந்த வாழ்ந்திருக்க மாட்டேன். இரவு ஒன்று பேசி பகல் ஒன்று பேசியிருக்க மாட்டேன் செய்திருக்கவும் மாட்டேன்.
அமெரிக்காவில் அரச தலைவர்கள் மற்றும் படைகளின் முக்கியஸ்தர்கள் மனநல மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல இங்கும் அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும்.” எனவும் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.