Top News

இவ்வாரத்திற்குள் இலங்கை அரசியல் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி - சற்றுமுன் ஜனாதிபதி


அடுத்த ஏழு நாட்களுக்குள் நாட்டில் தற்போது நிலலும் அரசியல் சர்ச்சைக்குத் தீர்வு காணப் போவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில் இன்று மைத்ரி நிகழ்த்திய உரை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் உச்சநீதிமன்றம் அவரது நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்கிறது.

மைத்ரியின் திடீர் அரசுக்கு எதிரான இடைக்காலத் தடை இன்னும் எட்டு நாட்களுக்கு இருக்கு நிலையில் ஏழு அல்லது பத்தாம் திகதிக்குள் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே மைத்ரி ஏழு நாட்களுக்குள் தீர்வு வரும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post