பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைத் தினம் இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏதுவாகவிருந்தாலும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கமைய புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடமளித்து, மஹிந்த தரப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ஒரு எதிர்க்கட்சி தலைவராக தமது பணிகளை சிறப்பாக மேற்கொள்வார் எனப் பொதுஜன பெறமுண தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக எந்தவொரு சக்திக்கும் தான் ஆதரவு வழங்குவதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிக்காவை பிரதமராக நியமிப்பதில் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தில் இதுவரை எந்தவொரு மாற்றமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு தெரிவித்திருந்தபோதும், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிந்து தகவ்கள் வெளியாகியுள்ளன.