வடக்கு கிழக்குஇனப்பிரச்சினைக்கு ஆயுத கலாச்சாரத்தால் எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக சகல தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசாங்கம் விரைவில் முன்வைக்கும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
ஹிஸ்புல்லாஸ் உட்பட கிழக்கு மகாணாத்திலுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளிடத்தில் ஆயுதங்கள் இருப்பதாக புனர்வாழ்வுஅளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி குற்றம்சாட்டியுள்ள அதேவேளை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசாரிடமும்முறையிட்டுள்ள நிலையிலேயே ஹிஸ்புல்லாஹ் தமிழர்களுக்கு ஆயுத கலாசாரம் பயனற்றதுஎன்று கூறியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
காத்தான்குடிமத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மைத்ரி - மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு வவுணத்தீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு அவர்களது ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை ஒரு திட்டமிட்ட செயல் என இராணுவ, பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
2009 ஆம் ஆண்டுயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொலிஸாரை படுகொலை செய்து அவர்களதுஆயுதங்களை எடுத்துச் சென்ற சம்பவம் 9 வருடங்களின்பின்னர் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் கூடி ஆராய்ந்து பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்புக்கு உடனடியாக சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறானமோசமான செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதகலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் இதனால் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்களும், யுத்த சூழ்நிலையுமே ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.