SLMCயை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்து அரசியலமைப்பை மீறிய ரணில்

NEWS
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு அப்போது கோரிநின்றார்.

நாடாளுமன்றத்தில்  நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்தே, அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார். அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
6/grid1/Political
To Top