நாடாளுமன்றத்தில் இன்று ரணிலை ஆதரித்து கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளை ஏற்று செயற்பட இணங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அதற்கான உறுதி ஆவணம் இன்று கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் காலை விசேட இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றதாக தெரியவருகிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும் இன்னும் கூட்டமைப்பு எப்படியான நிலைப்பாட்டையோ அல்லது தீர்மானத்தையோ எடுக்கப்போகின்றது என தெரியவில்லை.
இன்று 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்றில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.