UNPயுடன் இணைவது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் - மஹிந்த அமரவீர

NEWS
புதிய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணையுமா இல்லையா, என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று வரை தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை (17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சி தாவலில் ஈடுபட்டவர்கள் மற்றும் மற்றும் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top