புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டுமென ஐக்கிய சேதியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்...
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பு சூழ்ச்சித் திட்டத்தில் பங்களிப்பு செய்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரையும் அமைச்சர்களாக நியமிக்கப்படக் கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.நாட்டின் அரசியல் அமைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டுமென இறுதியில் தீர்மானித்த காரணத்தினால் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி பிரதமராக நியமித்தார் என எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.