17 அரச நிறுவனங்கள் தொடர்பான பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற குழுவான கோப் குழுவின் விசாரணை அறிக்கைககள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தியால் இவ்வறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைககள் இவ்வாறு சமர்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மூன்று மாத காலப்பகுதியிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி கூறினார்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், நெல் விநியோக சபை, மில்கோ நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த நட்டம் சாதாரமான நட்டம் அல்ல என்றும் சுனில் ஹந்துனெத்தி கூறினார்.
இன்றாகும் போது 2018ம் ஆண்டில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 40 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்டத்தை நாட்டு மக்களே சுமக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.