Top News

சவூதியில் 49 இலங்கை பெண்களை தடுத்த வைத்துள்ளனர்!

சவூதி அரே­பி­யாவின் அரச நிறு­வ­ன­மான பெண்கள் நலன்­புரி மத்­திய நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பெண்கள் 500 பேரில் 49 பேர் இலங்­கை­யர்கள் என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முன்பு சில பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாலே இப்­பெண்கள் இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் 21 பேர் அவர்­க­ளது நாட்­டி­லி­ருந்து விமான டிக்­கட்­டு­களை பெற்றுக் கொள்ளும் வரை தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

எஜ­மா­னர்­களால் சம்­பளம் வழங்­கப்­ப­டாமை குறித்து முறைப்­பா­டு­களைச் செய்­துள்ள 14 பெண்கள் இவர்­களுள் அடங்­கு­கின்­றனர். சம்­பள நிலு­வையைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அவர்­க­ளது எஜ­மா­னர்­க­ளுக்கு எதிராக வழக்கு தொடரப்­பட்­டுள்­ள­தா­கவும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.

பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட இலங்­கைப்­பெண்கள் 9 பேரும் இந்த மத்­திய நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பெண்­களில் அநேகர் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கைது செய்­யப்­பட்­ட­வர்கள் எனவும் அவர் கூறினார்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இலங்கை பெண்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு சவூதி­யி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரிகள் சென்று வரு­வ­தா­கவும் தேவையான சட்டநடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் இப் பெண்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli
Previous Post Next Post