பௌத்த தூபிக்கு மேல் நின்று, புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள, தென் கிழக்கு பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று 29 ஆம் திகதி, செவ்வாய்கிழமை சட்டத்தரணிகள் சிலர் அநுராதபுர நீதிமன்றில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அறியவருகிறது.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையில் சட்டதரணிகள் குழுவும் இன்று ஆஜராகுவதாகவும் தெரியவந்தது.