பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் வாசீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கொண்டுவரும் அபிவிருத்திகளை தடுப்பதாக பொத்துவில் மக்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அன்மையில் பொத்துவில் ஹிதாயாபுரம் வட்டாத்தில் 12 இலட்சத்திற்கு மேலான அபிவிருத்தி திட்டமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உறுப்பினர் மனாப், மையாவாடி சுற்றுமதிலுக்காக கொண்டுவந்துள்ளார்.
அப்பிரதேசத்தின் நீண்ட நாட்களாக காணப்படும் அச்சுற்றுமதில் உறுதியாக இல்லாததை ஜனாஸா நலன்புரி அமைப்புடன் பள்ளிவாசல் சாரர் மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தப்பட்டும் யாரும், கணக்கில் எடுக்கவில்லை ஆனால் இதை அறிந்து மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் கட்சி தலைவரின் நிதி ஒதுக்கீட்டின் கொண்டு அதனை பிரதேச செயலகம் மூலம் அபிவிருத்திகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அரசியலுக்காக முழுமையாக தடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு மையாவாடியின் அபிவிருத்தியை தடுக்கும் நோக்கம் தவிசாளர் வாசீத் அவர்களுக்கு என்ன தேவை இருக்கின்றது? ஊரின் நலனுக்காக பல பக்கங்களில் இருந்தும் பல அபிவிருத்திகள் கொண்டுவரப்பட்டாலும் இவ்வாறு தொடர்ந்தும் அவற்றை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் எதிர்ப்பதன் அரசியல் நோக்கம் என்ன??
அன்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் பொத்துவிலில் அமைக்கப்பட்டும் வரும் 50 வீட்டுத்திட்ட்டத்தை நிறுத்துவதற்கான செய்ற்பாட்டை எடுத்தார், சவாளைப் பகுதியில் இளைஞர்களால் அமைக்கப்பட்ட குழாக்கிணறைத் தடுத்தார்.
பொது சந்தை உடைப்பு திட்டம் தொடர்பாகவும் மக்கள் காங்கிரஸினர் குற்றம்சுமத்தினர்.
அந்த வகையில்;
பிரதேச சபைக்கும் எதுவித முன்னறிவித்தல் செய்துகொள்ளாமல் பொத்துவில் பிரதேச செயலக LA.Hathee (TO)மற்றும் முன்னால் ACMC யின் ஹிதாயாபுர வேட்பாளர் ALA.மனாப் ஆகிய இருவரினாலும் உடைக்கப்பட்டுள்ள செய்தியை கேள்வியுற்று அங்கு நேரடியாக பார்வையிட்டு பிரதேச செயலகத்தோடு பேசிய போது அங்கு கட்டுமானப்பணிக்காக எதுவித நிதியும் வரவில்லை பிரதேச செயலாளராகிய எனக்கும் இது சம்பந்தமாக தெரியவில்லை என்ற பதில் DS அவர்களிடமிருந்து வந்ததையிட்டு குறித்த இரண்டு நபர்களையும் பொத்துவில் பொலிஸாரால் பிரதேச சபை சொத்தை காரியாலயத்துக்கு எதுவித முன்னறிவிப்பும் செய்துகொள்ளாமல் அத்துமீறி சேதமாக்கியதற்காக கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி முறைப்பாடொன்று சபர்ப்பிக்கப்பட்டிருப்பதை பொத்துவில்வாழ் பொதுமக்களுக்கு அறியத்தருகிறேன். (தவிசாளர் வாசீத்)
இவ் மையாவாடியின் மதில் உடைக்கப்பட்டுள்ளதாகவும், அது என்னிடம் கூறவில்லை எனவும் பிரதேச சபைக்கு தெரிவிக்கவில்லை எனவும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பொலிஸிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
குறித்த மையாவாடி பிரதேச சபைக்கான எல்லையில்லை எனவும் அது பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள எல்லை எனவும் மக்கள் காங்கிரஸினர் ஆதாரபூர்வமாக முன்வைக்கின்றனர். (தொடர்புடையது)
(மக்கள் காங்கிரஸின் முஷ்ஷரப், தாஜூதீன் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் உள்ளிட்டவர்களின் குரல் இணைப்பு)