சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் அவர்களினால் பொத்துவில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரெலிய வேலைத்திட்டம் , விசேட கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற வேலைத் திட்டங்கள் அரசியல் சூழ்நிலை காரணமாகத் தடைப்பட்ட வேலைத்திட்டங்கள் போன்றவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயகவை பைசல் காசீம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து உரையாடினார்.நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் செயலாளருமான எம்.எம்.அன்ஸாரும் உடன் இருப்பதைப் படத்தில் காணலாம்.