Top News

மஹிந்த உள்ளிட்ட பலர் இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலுக்கு விஜயம்!

இஸ்லாமிய சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று22 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் கொழும்பு-03இல் உள்ள கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை ஆகியன இணைந்து இந்த திறந்த பள்ளிவாசல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

சகோதர இன மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், சமூக மற்றும் இன ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலும் பள்ளிவாசல்களில் தொழுகைகள், குத்பா உரைகள், குர்ஆன் ஓதுதல்,ஹதீஸ் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் எவ்வாறு இடம் பெறுகின்றன போன்ற விடயங்களை நேரடியாக தெளிவுபடுத்தும் நிகழ்வாக இந்த திறந்த பள்ளிவாசல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தது.`

இந்நிகழ்வில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, மேல்மாகாண ஆளுநர் அசாத் ஷாலி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பௌத்த மத போதகர்கள், பாதுகாப்புத் தரப்பினர்,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது இஸ்லாமிய கல்வி நிலைய தொண்டர்களாலும், பள்ளிவாசல் நிருவாக சபையினராலும் சிறந்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
Previous Post Next Post