Top News

மகிந்தவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் கூட்டமைப்பு

எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை யாருக்கும் வழங்காமலிருக்கத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த காரியாலயம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியன இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றில் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இரா.சம்பந்தன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டைத் தீர்க்க பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமித்து, அதன் ஊடாக இறுதி தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் செயற்படுவார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கப்பெறும் எந்தவொரு சிறப்புரிமையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்காது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
Previous Post Next Post