Top News

தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் விமல் வீரவன்ஸ!


மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். 

இந்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக விமல் வீரவன்சவின் சட்டத்தரணிகள் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

தன்னால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” எனும் நூலினூடாக, அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் ஜேவிபியின் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் சரியான விடயங்களை கருத்திற் கொள்ளாது தீர்ப்பு வழங்கியுள்ளதால், அந்த தீர்ப்பில் குறை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார். 

இதன்காரணமாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார்.
Previous Post Next Post