மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மோசடிக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அமைச்சருமான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஊழல் மோசடிகளை இல்லாமலாக்கி குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாக தெரிவித்தே நாங்கள் அதிகாரத்துக்கு வந்தோம். அதன் பிரகாரம் எமது அரசாங்கத்தினால் 120க்கும் அதிகமான ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் முடிந்துள்ளன. ஆனால் வழக்கு விசாரணைகள் தாமதித்து வருவது தொடர்பில் அனைவருக்கும் பிரச்சினை இருக்கின்றது.
என்றாலும் வழக்கு விசாரணைகளை துரிதமாக முடிவுக்கு கொண்டுவரத் தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். மூன்று நீதிபதிகளைக்கொண்ட 3 விசேட நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் முதலாவது நீதிமன்றம் தற்போது செயற்பட்டு வருகின்றது. இரண்டாவது விசேட நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் செயற்படவில்லை. அதேபோன்று மூன்றாவது நீதிமன்றத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இந்த நீதிமன்றங்களில் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் விசாரணை முடியும் வரைக்கும் தொடர்ந்து இடம்பெறும். இதனால் யாருக்கும் அநீதி ஏற்படப்போவதில்லை. இவ்வாறான விசாரணைகள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. அதனால் ஏனைய இரண்டு விசேட நீதிமன்றங்களை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடி தொடர்பாக ஆராய ஆணைக்குழு அமைக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் கடந்த காலங்களில் 32 பாரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. அதில் ஐந்திற்கே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மோசடிக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது. இந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்களில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.