புதிய தேர்தல் முறையில் நடத்த தீர்மானித்ததால்தான் மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாமல்போனது. விரைவில் நடத்த வேண்டும் என்றால் பழைய முறையில் நடத்த தீர்மானிக்கவேண்டும். அத்துடன் நாட்டின் அரசியல் பிரச்சினை இருப்பதென்றால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் அதனை தீர்த்துக்கொள்ளலாம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக பாராளுமன்றமத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் அரசியல் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கின்றனர். அரசியல் பிரச்சினை இருப்பதென்றால் அதனை தீர்த்துக்கொள்ள இருக்கும் சிறந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதாகும்.
இதன் மூலம் அரசாங்கத்தை மாற்ற முயடிம்.அதனால் நடத்த முடியாத விரைவில் நடத்த முடியாத தேர்தலை நடத்துவதைவிட ஜனாதிபதி தேர்தலுக்கு சென்று அரசாங்கத்தை மாற்றியமைக்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும் என்றார்.