Top News

”வட- கிழக்கு இணைப்பு” வதந்தியே - சிங்கள மக்கள் முன்னிலையில் ஹக்கீம்

வட- கிழக்கை இணைத்து தனி­யான நிர்­வாக அல­கினை வழங்க இந்த அரசு முயற்­சிக்­கி­றது என்று வதந்­திகள் உலவி வரு­கின்­றன. அந்த செய்­தியில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை என நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கண்டி, திகன பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் விகா­ரை­யொன்றில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அமைச்சர்,

அதி­காரப் பகிர்வின் மூலம் அல்­லது வேறு ஏதா­வது வழி­களின் மூலம் சுயாட்­சிக்­கான ஏற்­பா­டுகள் நடை­பெ­று­வ­தா­கவும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது பாரா­ளு­மன்­றத்தில் இந்த அரசின் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க உத­வி­யது வடக்­கையும் கிழக்­கையும் இணைத்து தனி­யான அதி­கா­ரத்தை அவர்­க­ளுக்கு வழங்­கவே எனும் வகை­யிலும் பல்­வே­று­பட்ட பொய்ப் பிர­சா­ரங்கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. ஆனால் இவை அனைத்தும் முற்­று­மு­ழு­தாக பொய்­ய­ான­வை­யாகும்.

கடந்த வருடம் இந்த திகன பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத இன­வாத செயற்­பாட்­டின்­போது அதனை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் இந்த இந்­தி­ர­சார விகா­ரையின் விகா­ரா­தி­பதி கெர­டி­கல சந்­த­வி­மல தேரர் செய்த பங்­க­ளிப்­பி­னையும், அதற்­காக எடுத்­துக்­கொண்ட முயற்­சி­யையும் முஸ்லிம் சமூகம் கௌர­வத்­துடன் ஞாப­கத்தில் வைத்­துள்­ளது. இந்த அர­சாங்கம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செய­லாற்­றிக்­கொண்­டி­ருக்கும் அதே­வேளை, அவ்­வப்­போது வெவ்­வேறு பிர­தே­சங்­களில் சில அசம்­பா­வி­தங்கள் நடை­பெ­று­வ­தையும் நாம் அறிவோம். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் எங்­களின் மத்­தியில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும், சரி­யான புரி­த­லின்­மையும் பிரச்­சி­னைகள் மேலும் வளர்ச்­சி­ய­டைய கார­ண­மா­கின்­றன. இருப்­பினும் இந்த சம்­ப­வங்­க­ளுக்குப் பின்­ன­ணியில் திட்­ட­மி­டப்­பட்ட முறையில் செயற்­பட்ட கண்­ணுக்குத் தெரி­யாத சக்­திகள் இருந்து வந்­ததை பின்னர் நடை­பெற்ற விசா­ர­ணை­களின் போது தெளி­வா­கி­யது. இவ்­வா­றான அசம்­பா­வி­தங்­களை தவிர்க்க நமக்குள் பரஸ்­பர புரிந்­து­ணர்வு ஏற்­பட வேண்டும்.

இந்த நாட்டில் திட்­ட­மிட்டு ஒரு­வ­ருக்கு மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­து­வது அல்­லது தொந்­த­ரவு செய்­வ­தனை அனு­ம­திக்க முடி­யாது. இருப்­பினும், அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இவ்­வா­றான செயற்­பா­டு­களின் பின்­பு­லத்தில் மறை­முக சக்­தி­க­ளாக இருந்து செயற்­பட்டு பொது­மக்­களின் அவ­தா­னத்தை கவர்ந்­தி­ழுக்க முயற்சி செய்­கின்­றனர். கடந்த 52 நாட்­க­ளாக இந்த நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­கடி நிலை­மை­யோடு மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை பரப்­பு­கின்ற முயற்­சியில் தற்­போது இறங்­கி­யுள்­ளனர்.

இந்த நாட்டில் அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களை கொண்­டு­வர முடி­யு­மான இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு சட்­ட­மன்ற செயற்­கு­ழு­வொன்றை உரு­வாக்­கி­யுள்ளோம். அதில் எங்­க­ளது கட்­சி­யைப்­போ­லவே ஆளும் கட்­சி­யினர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர், முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவின் கட்­சி­யினர் என பலர் அங்கம் வகிக்­கின்­றனர். இந்த செயற்­கு­ழு­வி­னூ­டாக கலந்­து­ரை­யாடல் மேற்­கொண்டு அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களை மேற்­கொண்டோம். அந்த மாற்­றங்­களில் இந்த நாட்டில் புத்­த­சா­ச­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள உயர்ந்த அந்­தஸ்தை சிறி­தேனும் குறைப்­ப­தற்­கான எவ்­வி­த­மான யோச­னை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. பௌத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள அதே அந்­தஸ்தை குறை­வில்­லாமல் வழங்­கு­வ­தோடு ஏனைய மதங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அந்­தஸ்­தி­னையும் அதே­ய­ளவில் வழங்­கு­வதே சிறந்­தது என எல்­லோரும் கருத்து தெரி­வித்தோம்.

இந்த நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு எவ்­வி­தத்­திலும் பாதகம் ஏற்­பா­டாத வகையில் சில சொற்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள நாங்கள் ஆலோ­சனை கூறினோம். சிலர் தமிழ் மொழியில் உள்ள ஒற்­றுமை என்ற சொல்­லுக்­கான பிழை­யான அர்த்­தத்தை கற்­பித்துக் கொண்டு மக்­களை தூண்­டி­விட முயற்சி செய்­கி­றார்கள். இவர்­களின் அர­சியல் நோக்கம் கொண்ட இந்த செயற்­பாடு தொடர்பில் நாங்கள் கவ­லை­ய­டை­கிறோம்.எனவே தவறான வதந்திகள், பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
Previous Post Next Post