Top News

ஹபாயா ஆசிரியர் பிரச்சினை : பாடசாலையில் தொடர் புறக்கணிப்பு

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் கட­மை­யாற்றும் நான்கு முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட குறித்த பாட­சா­லையின் அதிபர் மீண்டும் ஆட்­சே­பனை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் இத­னை­ய­டுத்து புதிய ஆண்டில் பாட­சாலை ஆரம்­பித்­தது முதல் நேற்று வரை வகுப்­ப­றை­க­ளுக்குச் சென்று கற்­பித்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட நேர­சூசி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் தெரிய வரு­கி­றது.

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கற்­பிக்க முடி­யாது என பாட­சாலை தரப்­பினால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 9 மாதங்­க­ளாக குறித்த ஆசி­ரி­யைகள் நால்­வரும் தற்­கா­லிக இட­மாற்றம் பெற்று வேறு பாட­சா­லை­களில் கட­மை­யாற்றி வந்­தனர். இந் நிலையில் தற்­கா­லிக இட­மாற்றம் முடி­வுக்கு வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் மீண்டும் திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரிக்கு குறித்த ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மைக்குச் சென்­றனர். எனினும் குறித்த ஆசி­ரி­யைகள் வகுப்­ப­றை­க­ளுக்குச் சென்று தமது வழக்­க­மான பாடங்­களை கற்­பிப்­ப­தற்­கான நேர சூசி அதிபரால் வழங்­கப்­ப­ட­வில்லை. அத்துடன் சாரி அணிந்து வரும் பட்­சத்­தி­லேயே வகுப்­ப­றைக்குச் சென்று கற்­பித்தல் பணி­களை முன்­னெ­டுக்க முடியும் என்றும் அதிபர் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து மீண்டும் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யைகள் தமது கட­மையைத் தொடர முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.


இவ் ஆசி­ரி­யை­களுள் ஒருவர் அப் பாட­சா­லையில் உள்ள விசேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­கான நிலை­யத்தில் கற்­பிக்கும் பயிற்­றப்­பட்ட ஆசி­ரியை எனவும் இந்த விவ­கா­ரத்­தினால் குறித்த நிலை­யத்தின் கற்­பித்தல் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கி­டையில் இந்த விவ­காரம் தொடர்பில் குறித்த ஆசி­ரி­யைகள் நால்­வரும் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு ஒன்­றையும் செய்­தி­ருந்­தனர். இது விட­யத்தில் ஆசி­ரி­யைகள் சார்பில் குரல்கள் இயக்­கத்தின் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராகி வாதங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த விசா­ர­ணைகள் தொடர்பில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் விரைவில் கல்­வி­ய­மைச்­சுக்கும் மாகாண கல்வித் திணைக்­க­ளத்­திற்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யி­லேயே மீண்டும் அபாயா அணிந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரசூசி வழங்கப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post