Top News

ரிசாத் பதியுதீனின் திட்டத்தால் ; 100 மாணவர்களுக்கு புலமை பரிசில்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைப்பினால் இல்ஹாம் மரிக்கார் அவர்களின் ஆலோசனையில் 100 மாணவர்களுக்கான புலமை பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம் .

நாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் இருந்தாலும் தமது உயர்கல்வியை தொடர்வதற்கு பொருளாதாரம் ஒரு முட்டு கட்டையாக அமைந்து விடுகின்றது .

இதனை கருத்தில் கொண்டு கைத்தொழில் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய . இத் திட்டதினை கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனதினால் செயற்படுத்தபடுகின்றது . 
இத்திட்டத்தின் மூலமாக 100 மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வியினை தொடர்வதற்கு வழியமைக்கின்றது . நாட்டில் எத்தனையோ உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும் இப்படியான வறிய மாணவர்களை கண்டு கொள்வதில்லை.எனவே இவ்வாரான மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத் வதுடன் ஏனைய உயர்கல்வி நிறுவனகளுக்கு ஒரு முன்னோடியாகவும் இருப்பதில் பெருமிதம் அடைவதாக இன் நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தனது உரையில் தெரிவித்தார் .


இந் நிகழ்வானது தெஹிவளை SDS ஜெயசிங்க மண்டபத்தில் 10/02/2019 அன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத்சாலி அவர்களும் , விசேட அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார் அவர்களும் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் ஆலோசகர் உல்ரிக்கா அவர்களும்,சட்டத்துறை விவுரையாளர் சட்டத்தரணியுமான சர்டீன் அவர்களும்,மருத்துவத்துறை கல்வி ஆலோசகர் பைசீன் சுபைர் அவர்களும் ,மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் FM ஷரீக் அவர்களும்,கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ் அவர்களும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ரூமி அவர்களும் western கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சியாத் அவர்களும் படைத்துறை பணித்தலைவர் முஹமட் அவர்களும், பேருவளை மாநகர சபையின் உறுப்பினர்களானா கசீப் மரைக்கார் மற்றும் முஹம்மட் இஷாம் அவர்களும் ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மொஹமட்ரியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் சிறப்பித்தார்கள் .

இத்திட்டத்தினை மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத்சாலி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் இத்திட்டமானது இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான APJ அப்துல்கலாம் நினைவாக இல்ஹாம் மரைக்காரின் ஆலோசனையின் பெயரில் அமேசன் உயர்கல்வி நிறுவனத்தினூடாக அமுல் படுத்தப்படுகின்றது .

தகுதியான மாணவர்களை இப்புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் உங்கள் பெயர், பாடநெறியின் பெயர் முகவரியினை பின்வரும் இலக்கங்களுக்கு குறுந்தகவல் மூலமோ வாட் அப் மூலமோ அனுப்பமுடியும் 0765204604 / 0765204605.

பின்வரும் பாடநெறிக களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒருவர் ஒரு பாடநெறிக்கு மாத்திரமே விண்ணப்பிக்கலாம் பாடநெறிகளாவன Certificate in Counselling&Psychology, Child Psychology, Teacher Training, Business Management, Spoken English, AMI, Marketing Management, Accounting, Islamic Banking இப் பாடநெறிகளின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
Previous Post Next Post