நாட்டிலுள்ள அனைத்து தொல்பொருள் அமைவிடங்களிலும் (Sites) அது தொடர்பான அறிவித்தல் பலகைகள் நிறுவப்படும். தொல்பொருள் திணைக்களத்தினால் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறிவிப்புப் பலகைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அவ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்கவோ அகௌரவப்படுத்தவோ முடியாது என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.பீ. மண்டாவல தெரிவித்தார்.
தொல்பொருள் அமைவிடங்கள் பெரும்பாலானவற்றில் அறிவிப்புப் பலகை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பில் வினவியபோதே அவர் ஊடகம் ஒன்றீக்கு இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்;
‘எமது மரபுரிமைச் சொத்துகளான தொல்பொருட்களைப் பாதுகாப்பது எமது கடமையாகும். தொல்பொருட்கள் மீது ஏறி நின்று புகைப்படம் எடுப்பதும் அகௌரவப்படுத்துவதும் தொல்பொருள் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும். இந்த குற்றச் செயல்களைப் புரியும் எவரும் தான் அறியாமல் அவ்வாறு செய்துவிட்டதாக கூறி தப்பிக்க முடியாது என்றார்.
இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் விராஜ் பாலசூரியவைத் தொடர்பு கொண்டு கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடெங்கும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் அமைவிடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் அமைவிடங்களே தொல்பொருள் திணைக்களத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் அமைவிடங்களைப் பார்ப்பதற்கு பெருந்திரளான வெளிநாட்டு உல்லாச பயணிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகிறார்கள். இவர்களை அறிவுறுத்துவற்காக மூன்று மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் அனைத்து அமைவிடங்களிலும் நிறுவப்படும் என்றார்.