(A G M தௌபீக்)
ஜே.பியின் பிரியாவிடைக்குள்,பல புரியா விடைகள்
தேசிய காங்கிரஸ் தவிசாளர் உதுமாலெவ் வையின்,பிரிவு கட்சியின் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாகலாம்.கட்சியின் பிறப்பிலிருந்து அதி உச்ச வளர்ச்சி வரைக்கும் இவரது பங்கு ஒரு தந்தைக்கு நிகராகியிருந்தது."மரணம் மட்டும்தான் எங்களைப் பிரிக்கும்" என்று கட்சியின் தலைமையைக் கட்டித்தழுவி,இவர் ஆனந்தக் கூத்தாடிய காலங்கள் கிழக்கில் அதிலும் அம்பாரை மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தன.
முஸ்லிம் காங்கிரஸின் மிகப்பலமான கோட்டையாக இருந்த அட்டளைச்சேனையில் வேறு எந்தக் கட்சியும் போட்டியிட முடியாத,போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாத நிலை அப்போ திருந்தது.பலத்த எதிர்ப்புக் களத்தில் அட்டாளைச்சேனையில் உதுமாலெவ்வை அரசியல் செய்தமை அலாதித்துணிச்சல்தான்.தேசிய காங்கிரஸ் தலைமையின் வழிநடத்தலே, உதுமாலெவ்வைக்கு இந்தத்துணிச்சல், தைரியத்தைக் கொடுத்தது.
தேசிய காங்கிரஸின் மிகப்பலமான கோட்டையான அக்கரைப்பற்று மக்கள் தலைவர் அதாவுல்லாவை நேசிப்பதற்குச் சரி நிகராக உதுமாலெவ்வைவையும் நேசித்தனர். இரண்டு முறைகள் மாகாண சபை அமைச்சராக்கி, உதுமாலெவ்வையை தேசிய காங்கிரஸ் நெஞ்சோடு அணைத்து நேசத்தேசம் என்ற புனைப்பெயரையும் அட்டாளைச்சேனைக்குச் சூட்டி மகிழ்ந்தது. இத்தனைக்கும் இத்தேசத்திலிருந்து அரைப்பங்கு வாக்காவது தேசியகாங் கிரஸுக்கு கிடைத்திருக்கவில்லை.இருந்த போதும் அயற்கிராமங்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் பெருந்தன்மையிலிருந்து, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா சற்றும் தளராது கட்சியை வழிநடத்தினார். நிந்தவூர் சம்மாந்துறை,மருதமுனை,அட்டா ளைச்சே னைக்கு கட்சி சார்பாக கிடைத்த மாகாண சபைப் பிரதிநிதித்துவங்கள் இதற்கான காலமுணர்த்தும் சாட்சிகள்.தேசிய காங்கிரஸுக்குள் என்னை உள்வாங்குவதிலிருந்த உதுமாலெவ்வையின் பங்கை நினைத்து,எனது கண்கள் இப்போது கங்கை நீராகின்றன.
ஏறாவூரில் 2017 இல் இடம்பெற்ற மர்ஹும் அஷ்ரஃபின் ஞாபாகார்த்த நினைவில் உரையாற்ற முன்னாள் அமைச்சர் சுபையிர் என்னையும் அழைத்திருந்தார்.அந்தக் கூட்டத் தில் எனது உரையைக் கேட்ட உதுமாலெவ் வை தேசிய காங்கிரஸில் இணைவதற்கான அழைப்பை விடுத்தமை அவரது கட்சி விசுவா சத்திற்கான விலை உயர்ந்த பெறுமானங்களா கும். இந்த மனச்சாட்சியை மலினப்படுத்தாத, வகையில் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்,நான் உதுமாலெவ்வையின் புதுக்க டைச் சந்திப்பை எழுதியதையே இப்போது விளக்க வருகிறேன்.
நாடிபிடித்தறிதல்,உளவியல்,செய்தித் தேடல் என்பவையே ஒரு ஊடகவியலாளனைச் செம்மைப்படுத்துகிறது.ஓய்வு நேரத்திலும் ஓயாது செய்தி தேடுவது எங்களுக்களிக்கப் படும் விசேட பயிற்சி.தேசிய காங்கிரஸ் பதவிகளிலிலுருந்து விலகுவதாகக் கடிதத்தை அனுப்பிய உதுமாலெவ்வையின் தொலை பேசி ஓய்விலிருந்த காலமது. கட்சிக்காரன் என்ற பொறுப்பும்,கடமையைச் செய்ய வேண் டுமென்ற உணர்வும் உதுமாலெவ்வையைத் தேடி அலைந்தன.கும்பிடப்போன தெய்வம் குறுக்காக வந்தது போல புதுக்கடைக்கு வந்த, அவரை எமது கண்கள் கண்டு கொண்டன. எந்தச் சந்தர்ப்பங்களையும் சூடான செய்தியாக்கி,சுவையாக வழங்கும் நண்பர் சுஐப் எம்.காசிம் மிகச்சாதுர்யமாக உரையாடி சில விடயங்களை மனதில் பதிவிட்டார். "முஸ்லிம்களுக்காக உள்ள தனித்துவ கட்சிகள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க இயலாது" உதுமாலெவ்வையின் இந்தவார்த் தைகளில் சொந்தக் கட்சியில் நம்பிக்கையிழ ந்த விரக்தி வெளிப்பட்டது."வேகமாகச் செயற்படும் இளம் தலைமைகளுடன் இணை வது தேங்கிக்கிடக்கும் முஸ்லிம்களுக்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும்" அவரது இரண்டாவது வார்த்தைகள் அமைச்சர் ரிஷாதுடன் இணக்கம் ஏற்படும் மனோபாவத் தைத்,துலக்கியது."நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் பொருத்தமான நேரத்தில் பெறுமதியான முடிவு எடுக்கப்படும்" இந்த வார்த்தைகளுடன் சுஐப்.எம்,காசிம் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக விடைபெறு வோ மே என்றார்.இதற்குள் டீ குடித்தது,போட்டோ எடுத்ததெல்லாம் சந்திப்புக்கு அப்பாலானவை.
ஊடகத்துறையில் நீருக்குள் நெருப்பைக் கட த்தும் சுழியோடி சுஐப்.முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாவது பிளவை எதிர்வு கூறியவரும் இவர்தான்.அதாஉல்லா, ஹரீஸ், மர்ஹும் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் சந்திரிக்காவின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவர் என்று 2004 இல் இவர் எழுதிய செய்தி ஆறுமாதங்களின் பின்னர் ஊர்ஜிதமானது. முன்னாள் அமைச்சர்களான கல்முனை மன்சூர்,நிந்தவூர் முஸ்தபாவை எல்லாம் வலுக்கட்டாயமாக, அஷ்ரபுடன் இணைக்கத் திட்டமிட்டு செய்தி எழுதிய சுஐபை பாராட்டிய மர்ஹும் அஷ்ரஃப் அவருக்கு (trouble maker,) தொந்தரவுச் செய்தியாளர் (double shooter) இரட்டைச் செய்தியாளர் என்றும் பட்டம் சூட்டியிருந்தார்.புதுக்கடைச் சந்திப்பை எப்படி எழுதுவோம் என்றார் சுஐப். எப்படியாவது எழுதுங்கள் என்ற எனது பதிலில் விரக்தி ஒழிந்திருந்ததையும் அவதானித்தார் அவர்.செய்தி வெளியான போது கடும் விமர்சனங்களால் மனமுடைந்த எனக்கு,கட்சியின் தலைவர் அதாஉல்லாவின் தீர்க்கதரிசனம் ஆறுதலளித்தது.என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்,தௌபீக் எதை வைத்து ஊகித்தீர் என்றார்.பொருட்படுத்தாத பதில்களை வைத்து என்றேன். உண்மையை எழுதியுள்ளீர்,அண்மைக்காலமாக உதுமாலெவ்வையின் உடம்பு நமது கட்சியோடு உள்ளது, ஆனால் உள்ளம் எங்கோ அலைமோதுவதை அவதானிக்கிறேன் என்றார் தலைவர்.
உண்மையான சில விடயங்களை சில அரசியல்வாதிகள் பொருட்படுத்தாது சொல்வ துண்டு.ஏதாவது சிக்கலில் மாட்டினால் சீரியசாகக் கூறவில்லையே என்று தப்பிக்கும் மிகப் பெரிய,அரசியல் யுக்தியே இது.அன்று எனைனை விமர்சித்த நண்பர்களுக்கு இன்று புரிந்திருக்கும் எல்லாம்.....