பொரள்ளை பொலிஸ் மீது மோதல் : மஹிந்தானந்தவின் மகன் கைது

NEWS
0 minute read
கொழும்பு – பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்காமகேயின் மகன் ரனிஷ்க அளுத்காமகேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளைக் குறித்த சம்பவம் தொடர்பில் டிபென்டர் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகியோறும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
To Top