பி. முஹாஜிரீன்
சின்னப்பாலமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'பொது வாசிப்பகம்' திறப்பு விழா புதன்கிழமை (21) நடைபெற்றது.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் என்.ரீ. கமால்தீன் தலைமையில் நடைபெற்ற .வ்விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு வாசிப்பகத்தை திறந்த வைத்தனர்.
இவ்விழாவில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.எம். ஹனீபா, எச்எம்.சிறாஜ், ஏ.பி. பதுறுதீன், ஆர். றிஸ்பா, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. ஜாபீர், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தவைர் ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி, பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ. அன்சார், சின்ன்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.உதுமாலெவ்வை, ஸஹ்வா அறபுக் கல்லூரி அதிபர் ஏ.ஆர். றமீன் மதனி, பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல். அலியார், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி. அம்ஜத், ஏ.ஜி. அஸ்மின், எஸ்.எச். தம்ஜீது, ஐ.எல்.சனீர், ஆசிரியர்களான எம்.எச்.நிஸார்தீன், ஓ.எல்.எம். முபாறக் மௌலவி, சனசமூக நிலையத்தின் தலைவர் பி.எம்.பசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வாசிப்பகத்தின் தேவைகள் அடங்கிய மகஜர்கள் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி உரையாற்றுகையில்,
'இவ்வாசிப்பகம் அடிப்படை வசதிகளின்றி ஏற்படுத்தப்பட்டாலும் பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியை நான் பாராட்டுகின்றேன். எத்தனையோ சங்கங்கள் தங்களது நிதியை பயனற்ற முறையில் செலவு செய்கின்றபோது பிரயோசனமான ஒன்றுக்காக இவர்கள் தமது சங்கத்தின் நிதியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாசிகசாலையின் இடம் வேறொரு நிறுவனத்திற்குச் சொந்தமாக, இருந்தாலும் இதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு முடியுமான உதவிகளை நாம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
இப்பகுதி மக்கள் இவ்வாசிப்பகத்தின் மூலம் கூடுதலான பயனைப் பெற வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான தேவையை வலியுறுத்தி அவற்றை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.
தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா உரையாற்றுகையில்,
'நாம் எமது பிரதேச சபைக்குக் கிடைக்கின்ற நிதியையும் வளங்களையும் பயன்படுத்தி, சட்டதிட்டங்களுக்கும் நிதிப் பிரமாணங்களுக்கும் அமைய இவ்வாசிகசாலையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்குரிய தினசரிப் பத்திரிகைகள் முழுவதும் எதிர்காலத்தில் பிரதேச சபையினால் வழங்கப்படும், இதற்கான தளபாடங்கள், மின்சார வசதி, நீர்வசதி போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்கு முடியுமான சாதகங்களை ஆராய்ந்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன.
இது பாடசாலைக்குச் சொந்தமான நிலமாகவும் கட்டடமாகவும் இருப்பதனால் இதனை பிரதேச சபையினால் பொறுப்பேற்றுச் செய்வதற்குரிய நிலமைகளை சிந்தித்து, இதன் தேவைகளை நிறைவு செய்த தர நடவடிக்கை எடுக்கப்ப:டும் ' எனத் தெரிவித்தார்.