போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் : ரஞ்சன் மீது விசாரனை

Ceylon Muslim
0 minute read
கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான குழு இன்று கூடியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். 

கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பில் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
6/grid1/Political
To Top