சிங்கள பௌத்தனாக இந்த நாட்டில் பிறந்ததனாலேயே தனது இனத்துக்கு எதிராக போராடி தற்போது சிறையில் இருப்பதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.மேற்படி கருத்தை அமைச்சர் மனோ கணேசனிடம் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்றையதினம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர்களான மனோ கணேசன், ரவி கருணநாயக்க மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் ஞானசார தேரரையும் சந்தித்திருந்தனர்.இதன்போதே ஞானசார தேரர் தன்னிடம் மேற்கண்டவாறு கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
”நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். ஆனால் நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன்” என கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.