மிஹிந்தளை ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பழமைவாய்ந்த தூபி ஒன்றின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள் பொலிசாரால் சென்ற வாரம் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு விளக்கமறியல் வைக்கப்பட்டது அறிந்ததே .
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மாணவர்கள் இருவருக்கும் மேலும் ஒரு வாரம் ( பெப் 27 வரை ) விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
18 , 20 வயதான குறித்த மாணவர்கள் இருவரும் நிட்டம்புவ பகுதி பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் மூதூரை சேர்ந்தவர்கள்
1. ரஸீன் மொஹமட் ஜிப்ரி (20 வயது) மூதூர்
2. ஜலால்தீன் ரிப்தி அஹமட் (18 வயது) மூதூர்.
ஆகியோர் ஆவர்.