இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன ஆகியோரிடமிருந்து அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கை வரும் வரையில் எதிர்பார்த்திருக்காமல் அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் தெரிவித்திருந்தார். இதேவேளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் பத்திரன குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த இருவரின் கருத்துக்களினாலும் அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே இவர்களைப் பதவி நீக்குமாறு கருத்துக்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.