ஞானசாரவை சிறைக்கு சென்று பார்வையிட்ட - மனோ, அசாத் சாலி, ரவி

Ceylon Muslim
0 minute read
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்து சுகம் விசாரிக்கும் நோக்கில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, செய்யாத குற்றச்சாட்டுக்களை இணைத்து, அவற்றை நீதிமன்றங்களில் நிரூபித்து தன்னை அநியாயமாகச் சிறையிலடைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் அமைச்சர்கள் மற்றும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

6/grid1/Political
To Top