பதவி விலகுகிறார் சிராஜ் மசூர்!

NEWS


அக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மாத அமர்வில் கலந்துகொண்டதன் பின்னர், தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

கட்சியின் அக்கரைப்பற்று செயற்குழுவினர், ஆதரவாளர்கள், தலைமைத்துவ சபையினருடன் கலந்துபேசிய அடிப்படையிலேயே, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இவரது வெற்றிடத்துக்கு, சபையின் புதிய உறுப்பினராக, ஓய்வுபெற்ற மாவட்ட புள்ளிவிவரவியல் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய எம்.எம்.தையாரை நியமிப்பதென, அக்கரைப்பற்று செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றவர்களுக்கு இடம்கொடுக்காமல், காலாகாலமும் பதவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்போரைத் தான் எதிர்த்து வந்திருந்ததாகவும் தற்போது தனது முறை வந்திருப்பதாகவும் தெரிவித்த சிராஜ் மசூர், தனது முழு விருப்பத்துடனேயே இவ்வாறு இராஜினாமா செய்யத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
6/grid1/Political
To Top