முஹம்மது நபியவர்களின் மனைவி அன்னை ஆயிஷாவை முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவுத் மிக கேவலமாக தன் முகநூலில் எழுதியுள்ளதை உலமா கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
பசீர் சேகு தாவுத் தன் முக நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். மகனே நீ உனது மகளை இது எனது மகள் ஆயிஷா என்று எனது கையில் தூக்கித் தந்த போது அவளின் முகத்தை முகர்ந்து ஏன் இப்பெயரைத் தேர்ந்தாய் என்று உன்னைக் கேட்டேன். இப்பெயர் நபியின் இளைய மனைவியின் புனிதப் பெயர் என்றாய். அப்போது, உனது மகள் ஆயிஷாவை ஐந்தாவது வயதில் ஐம்பது வயது ஆணுக்கு திருமணம் செய்து கொடுப்பாயா? என்று நான் கேட்டபோது நீ கொடுப்புக்குள் சிரித்தபடி மறுதலித்து ஒடுங்கிய ஒடுக்கத்தை இன்றும் நினைக்கிறேன்.
மேற்படி பசீர் சேகுதாவுதின் கூற்று நபியையும் அவர் தம மனைவியையும் அவமதிக்கின்றது. கட்சித்தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தால் அவர்களுக்கு தம் மனைவியரையும் குமாரிகளையும் கூட்டிக்கொடுப்போர் இருக்கும் போது நபியவர்களின் வாழ்க்கை என்பது முழு மனிதருக்கும் வாழ்க்கை என்பதுடன் ஒரு பெண் பருவமடைவதுதான் அவளது திருமண வயது என்பதை ஆயிஷாவை அவர்களின் 9 வயதில் நபிகள் திருமணம் முடித்தமைக்கான காரணமாகும்.
நபியவர்களின் முதல் மனைவி 40 வயது என்பதால் அந்த வயது விதவையை ஓர் இளைஞன் மணமுடிக்க முடியும் என்பதை காட்டுவதை பசீர் கவனிக்கவில்லையா? இஸ்லாம் பற்றி தெரியாமல் இடது சாரிகளுடன் சேர்ந்து அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டு ஆயுதம் தூக்கி போராடி தோல்வியுற்று பின்னர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து பதவிகளை அனுபவித்து விட்டு இப்போது கீழே விழுந்து ஞானம் பேசும் பசீர் சேகுதாவூதின் மேற்படி வார்த்தைகளை ஜமிய்யதுல் உலமா உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் கண்டிக்க முன் வர வேண்டும்.