Top News

படிக்காத மடையனை காரைதீவு மக்கள் தவிசாளராக கொண்டு வந்து விட்டனர்



- பிரதி தவிசாளர் ஜாஹீர் ஆவேசம்

காரைதீவு மக்கள் படிக்காத மடையன் ஒருவரை காரைதீவு பிரதேச சபை தவிசாளராக கொண்டு வந்துள்ளார்கள் என்று கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவுக்கு இப்பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களை அம்பாறையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் ஹிஸ்புல்லா கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

அப்போது காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச சபை சட்டங்களுக்கு முரணாக தொடர்ந்து செயற்பட்டு வருவது குறித்து ஆளுனருக்கு உப தவிசாளர் எழுத்துமூலம் முறையிட்டார்.

பிரதி தவிசாளரை ஒரு மாத காலத்துக்கு சபை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்று தவிசாளரால் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை செல்லுபடியற்றதும், சட்ட வலுவற்றதும் என்று தெரியப்படுத்தி சபையின் 07 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்த மனுவை ஆளுனரின் பார்வைக்கு சமர்ப்பித்தார்.

அப்போதே ஆளுனர் ஏன் இவ்வாறெல்லாம் காரைதீவு பிரதேச சபையில் நடக்கின்றது? என்று வினவினார்.இதற்கு பதிலளித்தபோதே ஜாஹீர் காரைதீவு மக்கள் படிக்காத மடையன் ஒருவரை தவிசாளராக கொண்டு வந்து விட்டனர் என்று பதில் அளித்தார்.ஜாஹீர் சமர்ப்பித்த மனுவை கவனமாக வாசித்த ஆளுனர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு உடனடியாக கட்டளை பிறப்பித்தார்.
Previous Post Next Post