மாகந்துர மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் கண்டுபிடிப்பு!

Ceylon Muslim

மாகந்துர மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் கண்டுபிடிப்பு பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடையதென கூறப்படும் கார் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Image result for aqua carபாதுக்கை, போரகெதர பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

அந்த காரை சோதனை செய்த போது எவ்வித அனுமதிப் பத்திரங்களும் இல்லை என்பதுடன், அனுமதிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் காரை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கார் ஏதாவது குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
6/grid1/Political
To Top