தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அவைத்தலைவரும், அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48 இற்கு அதிகரிக்காமலும், அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை 45 இற்கு அதிகரிக்காமலும் இருக்குமாறு தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்ககொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.