Top News

விக்னேஸ்வரனின் எதிர்ப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது




நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகளால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ள நீதிமன்றம் விசாரணை திகதியை வௌ்ளிக்கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. 

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். 

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். 

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது. 

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​ டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
Previous Post Next Post